மாவட்ட செய்திகள்
ஆம்பூரில் மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதாக கூறி நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தொழிற்சாலை தொழிலாளி கைது.
ஆம்பூரில் மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதாக கூறி நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தொழிற்சாலை தொழிலாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சல்மான் இவர் காலனி தொழிற்சாலையில் ஜாப் ஒர்க் செய்துவரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் சல்மானின் மனைவிக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் சல்மானின் நெருங்கிய நண்பரான துத்திபட்டு , கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஷபிக் என்பவரை மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக சல்மான் வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை சல்மான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டுக்குச் சென்ற ஷபிக் சல்மானின் மனைவியிடம் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி தகாத முறையில் ஈடுபட முயன்றுள்ளார் இதனால் சல்மானின் மனைவி மஹபூப் கூச்சலிட்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து நடந்த சம்பவத்தை கணவருக்கு தெரிவித்துள்ளார் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஷபிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வாணியம்பாடி கிளை சிறையில் அடைத்தனர்.
ஆம்பூரில் நண்பனின் மனைவிக்கு மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதாக கூறி தகாத முறையில் நடந்து கொண்ட தொழிற்சாலை தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.