BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

விரைந்த போராட்டக்காரர்கள்.மூடப்பட்ட சட்டப்பேரவை கதவுகள்.

புதுச்சேரியில் பரபரப்பு. 2021- 22 ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கூறு துணைத் திட்ட நிதியில் இதுவரை 328 கோடி ரூபாய் செலவிடப்படாமல் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி பட்டியல் இனத்தவர்களுக்கான வழிகாட்டுதல் இல்லாத பிற திட்டங்களுக்கும் இந்த நிதியை மாநில அரசு செலவழித்து இருப்பதாகவும் புதுச்சேரியில் உள்ள பட்டியலின அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

முறையாக நிதி செலவிடப்படாதையும், பிற துறைகளுக்கு அந்த நிதி செலவழிக்கப்படுவதையும் கண்டித்து புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியினர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று அண்ணா சிலை அருகிலிருந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கூட்டமைப்பின் தலைவருமான நீல கங்காதரன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட கிளம்பினார்கள். அவர்களை வழியில் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்த போலீஸார் முயன்றனர். குறைவான எண்ணிக்கையில் போலீஸார் இருந்ததால் தடுப்புகளை மீறி கொண்டு போராட்டக்காரர்கள் சட்டப்பேரவையை நோக்கி விரைந்தனர். அதனால் இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் சட்டப்பேரவையை நோக்கி வருவதை அறிந்ததும் சட்டப்பேரவையின் வாயில் கதவுகளை சட்டப்பேரவை காவலர்கள் அவசர அவசரமாக மூடினார்கள். பிறகு கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் புதுச்சேரியில் சட்டப்பேரவை அருகே பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )