BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலை பகுதியில் தொடர் காட்டுத்தீ.

கொடைக்கானல் பெருமாள் மலை பகுதியில் தொடர் காட்டுத்தீ அரிய வகை மரங்கள் வனவிலங்குகள் எரிந்து நாசம் போர்க்கால நடவடிக்கை எடுக்காத வனஆர்வளர்கள் வனத்துறைக்கு கோரிக்கை.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக அளவு அரிய வகை மரங்கள் சுமார் 200 வருடம் 100 வருட பழமையான மரங்கள் உள்ளன வருடாவருடம் வெயில் காலங்களில் மாசி பங்குனி சித்திரை மாதங்களில் அதிக அளவு வெப்பம் இருப்பதால் வனப்பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது வருடாவருடம் வனப்பகுதியில் பல இடங்களில் திடீர் தீ பற்று ஏற்படுவதால் பல அரியவகை மரங்களும் பழமையான மரங்கள் அழிந்து வருகிறது.

மேலும் வனப்பகுதியில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாகிவிட்டது பெருமாள் மலை பகுதியில் தற்போது காட்டுத்தீயால் இன்று காலை முதல் தொடர்ந்து இருந்து வருகிறது இதன் காரணமாக அரிய வகை மரங்கள் தற்போது இருந்து வருகின்றன மரங்களை பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது அரிய வகை மரங்கள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் வனத்துறையினர் படத்திற்கும் உள்ள அரிய வகை மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்னும் இரண்டு மாதங்கள் வெயில் காலம் உள்ள நிலையில் வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் மரங்களையும் மலைகளையும் காக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )