மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து மேள தாள வாத்தியங்களுடன் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து கோவில்பட்டி நகர பாஜக சார்பில் மேள தாள வாத்தியங்களுடன் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக நான்கு மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே மற்றும் இனாம்மணியாச்சி பகுதியில் கோவில்பட்டி நகர பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நகர தலைவர் பாலசுப்பிரமணியன்,பட்டியன் அனி மாநிலச் செயலாளர் சிவந்தி நாராயணன்,மேள தாள வாத்தியங்களுடன் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் சென் கேசவன்,வணிகப் பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன், ஊரக நகர வளர்ச்சி ஒன்றிய தலைவர் ராஜகந்தன், நகர பொதுச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய தலைவர் லட்சுமண குமார், தெற்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து, நகரச் செயலாளர் அருண் குமார்,நகர துணைத் தலைவர் செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கோபிநாத்,நகரமன்ற உறுப்பினர் விஜயகுமார்,மகளிர் அணி கலையரசி, ஒன்றிய பொதுச் செயலாளர் மாரிமுத்து ராஜா,கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.