BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் நல்லூர் மருகத்தலை பகுதியில் கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லூர் மருகத்தலை பகுதியில் உள்ள இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்வதற்காக வழிப்பறியில் ஈடுபட்டு இரவு நேரங்களில் வரும் நபர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது- இது குறித்து பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோர் நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த கஞ்சா வியாபார கும்பலின் குடும்ப உறுப்பினர்கள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்-இதுகுறித்து காவல்துறை உரிய விசாரணை முன் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் இவர் ஹோட்டலில் மாஸ்டராக வேலை செய்து வருகினார்.மனைவி பெயர்.சரோஜா இவர்களது மகன் விஷ்ணு கல்லூரியில் படித்து முடித்து தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்,இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணு என்ற இளைஞருக்கு தொலைபேசியில் ஒரு பெண் தொடர்பு கொண்டு உனது நண்பன் தங்கை பேசுவதாக கூறி பேசி வந்துள்ளார்,திடீரென இரண்டாவது முறை போன் செய்து தான் விபத்து ஏற்பட்டு நல்லூர் பகுதி சாலையில் விழுந்து கிடப்பதாக கூறி இரவு 9மணிக்கு அழைத்துள்ளார்,
இதை நம்பி இளைஞர் விஷ்ணு சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 9 பேர் கொண்ட கும்பல் விஷ்ணுவை பிடித்து இரவு முழுவதும் வைத்து கொலை வெறி தாக்குல் நடத்தி இளைஞரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் அவர் பயன்படுத்தி சென்ற இரு சக்கர வாகனத்தையும் பிடுங்கிவிட்டு வீட்டிற்கு போன் செய்து பணம் கேட்டும் மிரட்டி அடித்து விரட்டி உள்ளனர், இந்நிலையில் அங்கிருந்து தப்பித்து வந்த நிலையில் ஒரு இடத்தில் விழுந்து விஷ்ணு மயங்கியுள்ளான்,இதை கண்ட அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், இதன் பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தாக்கப்பட்ட இளைஞரிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் கோட்டார் காவல் நிலையம்,சுசீந்திரம் காவல் நிலையம்,வடசேரி காவல் நிலையம் ஆகிய காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர், அதைத் தொடர்ந்து விஷ்ணுவின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து மகன் மூலமாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்தில் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர், அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது, அவர்கள் பதிவு செய்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது,மேலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த கும்பலானது கஞ்சா விற்பனை செய்ய தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க தங்களின் சகோதரிகளை பயன்படுத்தி ஆண்களுக்கு போன் மூலம் தொடர்ப்பு கொண்டு எதாவது பொய் தகவல்களை கூறி குறிப்பிட்ட இடங்களுக்கு வரவழைப்பது,பின்னர் அங்கு வரும் நபரை தாக்கி அவரிடம் இருக்கும் பொருட்களை கைப்பற்றி அடித்து மிரட்டி அனுப்பியுள்ளனர் ஆனாலும் ஒரு சில கொலைகளும் இதில் நடப்பதாகவும் தற்போது தெரிகிறது, அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞன் உயிர் தப்பியுள்ளார்,இனி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக அந்த இளைஞரின் பெற்றோர் தைரியமான விசாரணையில் இறங்கினர்,அப்போது தான் கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்களுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் கஞ்சா சப்ளை செய்வதற்காக பணம் தேவை என்பதால் இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது, அந்த 9பேரின் முகவரி மற்றும் பெயர்களை தாக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்,அய்யாகுட்டி,முருகன், செல்லய்யா,மதன்,
லட்சுமணன்,செல்வம் மற்றும் போன் செய்து அழைத்த பெண் கௌசல்யா என்பது தெரியவந்தது இவர்கள் தான் வழிப்பறியில் ஈடுபட்டு அதன் மூலம் கொள்ளை அடிக்கக்கூடிய பணத்தை தேனி, கொடைக்கானல் போன்ற இடங்களில் கஞ்சா வாங்கிவந்து நல்லூர், நாகர்கோவில் போன்ற இடங்களில் பதுக்கி வைத்து குடும்ப உறுப்பினர்களை வைத்து பொட்டலங்கள் செய்து அதை விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது,மேலும் இது போன்ற இளைஞர்கள் இச்செயல்களை ஈடுபடுவதால் மாவட்டத்தில் கொலைக் குற்றங்கள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது இச்சம்பவங்களை போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது மேலும் இந்த பெற்றோரின் குமுறல் வேறொரு பெற்றோரின் கண்ணீருக்கு வழிவகுத்து விட கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்,இளைஞரிடம் இருந்து பறிக்கப்பட்ட தங்க செயின்,விலை உயர்ந்த செல்போன், இருசக்கர வாகனத்தை மீட்டு தரவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.தங்களின் பாதுகாப்பு கருதி மறைமுகமாக கிடைக்கப்பட்ட தகவலை பகிர்ந்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )