மாவட்ட செய்திகள்
வாணியம்பாடியில் நகை கடை அதிபர் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 3.25 லட்சம் மதிப்பிலான 8 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா சாலையில் சித்ரா தலைமையான தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பொக்காராம் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூபாய் 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான(8 சவரன்)தங்க நகைகளை பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்