மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகில் வல்லத்தில் குடிபோதையில் மூன்றுபேரை தாக்கியதாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை அருகில் வல்லத்தில் குடிபோதையில் மூன்றுபேரை தாக்கியதாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சகாயராணி. மகன் திருத்துவராஜ் (28). அதே பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் மகன் ஆரோக்கியராஜ்.
கடந்த 10ம் தேதி அதே தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் மகன் கிஷான் (26) குடிபோதையில் திருத்துவராஜ் உட்பட மூன்று பேரையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த திருத்துவராஜ், சகாயராணி, ஆரோக்கியராஜ் மூவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் வல்லம் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதேபோல் கிஷான் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் திருத்துவராஜ், ரொசாரியா, சகாயராணி, ஆரோக்
வல்லம், மார்ச் 12- தஞ்சை அருகே மருங்குளத்தில் மொபட் மற்றும் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சை அருகே வேங்கராயன்குடிகாடு தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சாமிநாதன் (60). இவரது மகன் சுதாகர். பேத்தி அனுஸ்ரீ (5). கடந்த 9ம் தேதி சாமிநாதன் தனது மொபட்டில் மருங்குளம் வடக்குப்பட்டு பஸ்ஸ்டாப் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை கரந்தை குருவிக்கார தெற்குத் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மகன் பார்த்தசாரதி (27) என்பவர் ஓட்டி வந்த பைக், மொபட் மீது மோதியது.
இதில் சிறுமி அனுஸ்ரீ, சாமிநாதன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வல்லம் போலீசில் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி சிவவடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.