மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே எல்லமடை பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே எல்லமடை பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே எல்லமடை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலுக்குச் சென்றுள்ளார். மறுநாள் வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் ஜன்னல்கள், பொருட்கள் சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், பீரோவை திறந்து பார்த்தபோது நகை திருடப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக அருகில் உள்ள பூலாம்பட்டி காவல்நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு எல்லமடை பகுதியைச் சேர்ந்த சம்பத் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்தனர். பின்பு அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.