மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பைக் திருட்டு.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கல்யாணபுரம் 1-ம் சேத்தி மனுநீதிபேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் நரேஷ் குமார் (26). இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வங்கிக்கு அருகில் முன்பு தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்
