மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கல்வித்தந்தை கே.ராமசாமி 3ம் ஆண்டு நினைவு தினம்.

கோவில்பட்டி கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கல்வித்தந்தை கே.ராமசாமி 3ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு மினிமாரத்தான் போட்டி துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கல்வித்தந்தை திரு.கே.ராமசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பின்புறமுள்ள காந்தி மைதானத்தில் இருந்து
17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டத்ததை, கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் மாதங்கோவில் பழையபேருந்து நிலையம் வழியாக நாலாட்டின்புத்தூர் கே.ஆர் மணி மண்டபத்தை வந்து அடைந்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற கயத்தாறு வி.பி.கே.பி. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் கனிராஜ்(16) முதல் பரிசு ரூ3000மும் கேடயமும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முகேஷ் (16)இரண்டாவது பரிசு ரூ2000மும் கேடயமும், அதேபள்ளியைச் சேர்ந்த மனோஜ்குமார் 3வது பரிசும் ரூ1000ம் கேடயமும் வழங்கினார்.
இதில் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ். சண்முகவேல் உட்பட கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
