மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே பள்ளி மாணவன் தற்கொலை – மாணவர்கள் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள வேங்கூர் ஊராட்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராணிஅம்மாள். திருநங்கையாவர் இவர் மதன்குமாரை(18) சிறுகுழந்தை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
மதன்குமார் வேங்கூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரமால் தொடர்ந்து விடுமுறை எடுத்துள்ளார். பெற்றோரையும் அழைத்து பள்ளி நிர்வாகம் கண்டித்துள்ளது.
மதன்குமாரை
வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கையில் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக
மனம் உடைந்த நிலையில் இருந்த மதன்குமார் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆய்வாளர் சந்திரமோகன் வழக்கு பதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகிறார். மேலும் மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மதன்குமார் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடிதத்தில்…
நா நல்ல பையன் கிடையாது. அதுபோல இந்த மரணத்திற்கு யாரும் வருத்தப்பட வேண்டாம் நன்றி.
என்று எழுதியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.