மாவட்ட செய்திகள்
திருச்சி வந்த ரெயிலின் கழிவறையில் மதுபாட்டில்கள் – ரயில்வே காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நேற்று இரவு காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வந்த ரெயிலில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வாசுதேவன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில் பெட்டியில் கழிவறை திறந்து இருப்பதைக் கண்டனர். அங்கு பை இருப்பதை கண்ட காவல்துறையினர்.
அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இதை கொண்டு வந்தது யார்? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என் கழிவறையில் விட்டுச் சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் இதேபோல் அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் மற்றும் மது கடத்தல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.