மாவட்ட செய்திகள்
மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் !
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த ஒன்பதாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.
இதனை அடுத்து அங்கு சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி தினமும் நடந்து கொண்டிருக்கிறது சூரிய வட்டம், சந்திர வட்டம், கிளி அன்னம் மற்றும் நந்தி வாகனம் போன்றவைகள் ஏற்கனவே நடந்து முடிந்தது.
கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு மிக்க உண்டான தேரோட்ட திருவிழா வரும் 15ஆம் தேதி நடைபெறும் இதற்கு பல மாவட்டங்களில் உள்ள மக்கள் அங்கு வருகை தருவார்கள்.
இதன் காரணமாக வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொண்டு வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சென்னை