மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அருகே சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது கார் மோதி விபத்து.
ஆம்பூர் அருகே சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது கார் மோதி விபத்து.
விபத்து ஏற்பட்ட பகுதியில் இரண்டு மணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட காரில் இருந்த 4 பேர் உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திலகராஜ்(எ) எட்வின் (36) என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் இந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியிலுள்ள மாமியார் வீட்டிற்கு காரில் சென்று மீண்டும் தனது இந்த ஊரான ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்திற்கு வீடு திரும்பிய போது பாப்பனப்பல்லி பகுதியில் வந்துகொண்டிருந்த போது திலகராஜிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் உடைந்து காரின் மீது விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது அப்போது விபத்துக்குள்ளான பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டு இருந்ததால் காரில் இருந்த கணவன் மனைவி மற்றும் இரு குழந்தைகள் உட்பட காரில் இருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் விபத்து ஏற்பட்ட சில மணி நேரத்தில் மின்சாரம் வழங்கியதால் விபத்து ஏற்பட்ட அருகிலிருந்த மற்றொரு மின்கம்பத்தில் தீப்பொறி ஏற்பட்டதில் அருகில் செடிகள் பற்றி மளமளவென எரிந்தது இதனால் சாலையில் செல்வோர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பதற்றமடைந்த தீயை அணைக்க முயற்சி செய்து போராடி தீயை அணைத்தனர் மேலும் உடனடியாக மின்சார துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின்பேரில் மின் துறையினர் மீண்டும் அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்யப்பட்டு விபத்தினால் மின் கம்பங்களில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்து பின்னர் மின்சாரம் வழங்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் செல்வோரிடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.