மாவட்ட செய்திகள்
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறாது கண் பரிசோதனை செய்யவேண்டும் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கூறினார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறாது கண் பரிசோதனை செய்யவேண்டும் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கூறினார்.
விழிப்புணர்வு வாரம்
உலக கண் அழுத்த நோய் (க்ளாக்கோமா) விழிப்புணர்வு வாரம் மார்ச் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள மண்டல கண் சிகிச்சை மைய கூட்ட அரங்கத்தில் கண் அழுத்த நோய் குறித்த கண் காட்சி நடைபெற்றது. மேலும் தொடர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. கண் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் டாக்டர் ஞானசெல்வன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
க்ளாக்கோமா என்பது கண் பார்வை நரம்பை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்நோயானது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நோயை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம் பார்வை இழப்பை முற்றிலும் தவிர்க்க முடியும்.
கண்பரிசோதனை
எனவே, 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது கண் பரிசோதனை வருடத்திற்கு ஒரு முறையேனும் செய்து கொள்ள வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்
முன்னாள் கண் துறை பேராசிரியர் டாக்டர் ராமையா, துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம். நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் உஷாதேவி, உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் கவுதமன், இணைப் பேராசிரியர் அன்புசெல்வி, துணைப்பேராசிரியர்கள் ராஜசேகரன், லாவன்யா. ஐஸ்வர்யா, வாணி மற்றும் பல்துறை பேராசிரியர்களும், துணைப் பேராசிரியர்களும், செவிலியக் கண்காணிப்பாளர்களும், செவிலியர்களும், மாணவர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் இணைப்பேராசிரியர் டாக்டர் ராஜா நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.