மாவட்ட செய்திகள்
ரஹ்மத் பெண்கள் மதரஸா 20ம்ஆண்டு துவக்க விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருச்சி தெற்கு உக்கடை அரியமங்கலம் பகுதி ஹாஜி குலாம் மைதீன் நினைவரங்கத்தில் ரஹ்மத் பெண்கள் மதரஸா சார்பில் 20ம் ஆண்டு துவக்க விழா மற்றும் 5ம் ஆண்டு ஆலிமா (மார்க்க ஆசிரியர் படிப்பு) பட்டமளிப்பு விழா ரஹ்மத் பள்ளி வாசல் முத்தவல்லி அல்ஹாஜ். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மாமன்ற உறுப்பினர்கள் மதிவாணன், சுரேஷ், திருச்சி மாவட்ட அரசு டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான், திருச்சி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை முஹம்மது ஷரீஃப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், பட்டமளிப்பு விழாவில் மதரஸாவில் மூன்று ஆண்டுகள் பயின்று பயிற்சி பெற்ற 12மாணவிகளுக்கு ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது ரூஹுல்ஹக் பட்டம் வழங்கி வாழ்தினார், மேலும் 12மாணவிகளுக்கு நலத்திட்ட உதவியாக பிரோ, கட்டில், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அஞ்ஜீமனே அர்ரஹ்மத் பள்ளி தலைமை இமாம் முஹம்மது ஷர்ஃபுதீன் யூசுஃபி, ரஹ்மத் பள்ளிவாசல் அஞ்ஜீமனே. அர்ரஹ்மக், ரஹ்மத் பள்ளிவாசல் துணை முத்தவல்லி சையத் ஹபீபுல்லாஹ் மக்கா மஸ்ஜித் இமாம் முஹம்மது சிராஜுதீன் மற்றும் மாணவிகள் பெற்றோர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
