மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே காயமடைந்த மயிலை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து பாதுகாத்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக வனப்பகுதிகளை கொண்ட பகுதியாகும் இங்கு யானை, கரடி, சிறுத்தை, மயில் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளது. இந்த வன உயிரினங்கள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்கு வரும் பொழுது காயமடைந்து பாதிக்கப்படுகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே பொன்மலைகுட்டை பகுதியில் வழித்தவறி வந்த மயில் ஒன்று காயமடைந்து பறக்க இயலாமல் இருந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் விரைந்து சென்று காயமடைந்த மயிலை மீட்டு உரிய சிகிச்சை அளித்து வன அலுவலகத்தில் உணவு தண்ணீர் வழங்கி பாதுகாத்து வருகின்றனர்.

அதே போல் என்.தட்டகல் கிராமத்தில் அடிப்பட்டு காயமடைந்த மயிலையும் வனத்துறையினர் மீட்டு உரிய சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர்.
மயிலின் காயம் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின் மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
