மாவட்ட செய்திகள்
திருப்பூர் உடுமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவி தேசிய குடற்புழு நீக்க நாள் – விழிப்புணர்வு நிகழ்வு.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இராகல்பாவியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்வு 14.03.2022 அன்று நடைபெற்றது.பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்.
நிகழ்வில் வாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலையரசி அவர்கள், மாணாக்கர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க நாள் பற்றியும், கைகளை சுத்தமாக கழுவுதல் , கை கழுவும் முறைகள் பற்றியும், எடுத்துக் கூறினார்.

மேலும் உணவு உண்ணும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்தபின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனவும், திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது எனவும் மாணாக்கர்களுக்கு விளக்கமளித்தார். மாணாக்கர்களுக்கு எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என்ற செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பின்பு மாணாக்கர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இறுதியாக உதவி ஆசிரியர் கண்ணபிரான், மாணாக்கர்களிடம் சுத்தமாக இருப்பதால் , எந்த நோயும் வராமல் நலமாக இருக்கலாம். திறந்த வெளியில் விற்கும் உணவுப்பொருட்களை வாங்கி உண்ணுதல் கூடாது என்று எடுத்துரைத்து நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
