மாவட்ட செய்திகள்
கன்னியா குமரி அருகே 1 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது.

கன்னியாகுமரி அருகே 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் சோதனைசாவடி அருகே காவல் உதவி ஆய்வாளர் கதிரேசன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை போலீஸார் சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதில் கஞ்சா வைத்திருந்த மகாராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
