BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை சரக டி.ஐ.ஜி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 பேருக்கு இன்று முதல் பயிற்சி முகாம்.

தஞ்சை சரக டி.ஐ.ஜி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 பேருக்கு இன்று முதல் பயிற்சி முகாம் தொடங்கியது.


இவர்களுக்கு ஏழு மாதம் அலுவலக ஆயுதப்படை காவலர் அடிப்படை பயிற்சியும், ஒரு மாதம் செயல்முறை பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி திண்டுக்கல், நாமக்கல் அகிய பகுதிகளில் இருந்து. மொத்தம் 213 பேர் பயிற்சி பெறுகின்றனர்.


பயிற்சிப் பள்ளிக்கு முதல்வராக தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ரவளி பிரியா, துணை முதல்வராக ஆயுதப்படை டி.எஸ்.பி., அமல்தாஸ், முதன்மை சட்டக்கல்வி பயிற்றுநராக இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, முதன்மை கவாத்து பயிற்றுனராக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி இன்று முதல் தொடங்கியது. முதல்நாளில் பயிற்சியை தொடக்கியை வைத்து பயிற்சி பெறுபவர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா ஆலோசனைகள் வழங்கினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )