மாவட்ட செய்திகள்
நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டத்தை அனைத்து பெற்றோர்களும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே விளம்பர வாகனம்.

பள்ளி மேலாண்மை குழு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு வாகனத்தை தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 படி அரசு வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளி களிலும் பள்ளி மேலாண்மை இருத்தல் அவசியமாகிறது. தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டத்தை அனைத்து பெற்றோர்களும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தொடங்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே விளம்பர வாகனம் மூலம் பள்ளி மேலாண்மை குழு சார்ந்து அனைத்து பகுதிகளுக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வாகனத்தினை தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த வாகனம் இன்று முதல் ஒரு வார காலம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
