மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நாகாலாந்து, மணிப்பூர் திரிபுரா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி.
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நாகாலாந்து, மணிப்பூர் திரிபுரா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அரசு கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் வடகிழக்கு மாநில கலைஞர்களின் மாபெரும் கலை நிகழ்ச்சி கடந்த 12ந் தேதி தொடங்கியது, நான்கு நாட்கள் நடைபெறும் .
இவ்விழாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மேகாலயா மிசோரம் நாகாலாந்து சிக்கிம் திரிபுரா மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில 300க்கும் மேற்பட்ட கலைஞர்களின் கலை விழா நடைபெற்று வருகிறது,
மூன்றாம் நாள் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நாகாலாந்து மாநில குப்பிலி மணிப்பூர் மாநில லாய் ஹரபா, திரிபுரா மாநில
சாங்ராய் மாக் ஆகிய பாரம்பரிய நடனங்கள் சிறப்பாக நடைபெற்றது, இந் நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.