மாவட்ட செய்திகள்
ஆக்கூரில் அருள்மிகு பூர்ணா புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ ஐயனார் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் ஊராட்சி உடையார்கோவில்பத்து கிராமத்தில் எழுந்தருளியிருங்கும் அருள்மிகு பூர்ணா புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ ஐயனார் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வேதவிற்பன்னர்கள் நான்குகால பூஜை செய்து மகா பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க, வானவேடிக்கை விண்னை எட்ட, புனிதநீர் அடங்கிய கடங்களை வேதவிற்பன்னர்கள் சுமந்து சென்று, வேத மந்திரம் ஒலிக்க கோயில் சுற்றி வலம்வந்து விமான கோபுர கலசத்தை அடைந்து புனிதநீர் ஊற்றபட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேகத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டார். அவருக்கு அருள்மிகு பூர்ணா புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ ஐயனார் கோவில் குழுவினரால் பூரண கும்ப மரியாதை செய்தனர். மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ் கண்ணன், ஆக்கூர் திமுக ஊராட்சி செயலாளர் முருகேசன் உட்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.