மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில் பட்டு வளர்ச்சி துறையில் அமைச்சர் ஆய்வு.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் வெண்பட்டு முட்டை உற்பத்தி மையம் மற்றும் குளிர்பதன கிடங்கை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வருகிற 18ம் தேதி பட்ஜெட் கூட்டதொடர் துவங்க உள்ள நிலையில் பட்டுவளர்ச்சி துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, இயக்குநர் சாந்தி, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், திமுக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.