BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம்பிடித்து பக்தி பரவசத்துடன் திருதேரை இழுத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 2000 ஆண்டுகள் பழமையான விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் ஆலயம் 108 சிவ ஷேத்திரங்களில் ஒன்று இங்கு பிரம்மாவிற்கு கிடைத்த பாவங்களை நீக்க இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து பாவ விமோசனம் பெற்றார் என்பது இங்கு சொல்லப்படும் புராணம் ஆகும்.

மேலும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் காலம் காலமாக பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கி தொடர்ந்து 12 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.


எப்போதும் போல் என்று திருத்தேரோட்டம் ஆனது காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மார்க்கபந்தீஸ்வரர் திருத்தேரில் ஏற்றி பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷங்களுடன் வடம்பிடித்து மாட வீதியில் சுவாமி வலம் வந்து கொண்டுள்ளார்.
தேரோட்டம் ஆனது இரவு 8 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


திருத்தேர் ஓட்டத்தையும் ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )