மாவட்ட செய்திகள்
திருச்சி மாவட்டம் 100-நாள் வேலைத் திட்டத்தை 200-நாட்களாக உயர்த்திட கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100-நாள் வேலைத் திட்டத்தை 200-நாட்களாக உயர்த்திட கோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
மாவட்டத் தலைவர் சண்முகானந்தம் தலைமையில்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
100க்கு மேற்பட்டோர் . அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்ட உரையை விவசாய சங்க மாநிலத் துணைச் செயலாளர் இந்திரஜித், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் ஆகியோர் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை 2.5 லட்சம் கோடியாக உயர்த்திடக் கோரியும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திட கோரியும், தின ஊதியம் ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கவும், பணி தளத்தில் காலை 6 மணிக்கு பதிவு செய்வதைக் கைவிட்டு விட்டு காலை 9 மணிக்கு பதிவு செய்யக் கோரியும், வீடுகள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு 8 சென்ட் வீட்டு மனை வீடு கட்ட ரூபாய் 6 லட்சம் வழங்க கோரியும், 60 வயதான சிறு குறு விவசாயிகள் உள்பட விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க கோரிக்கையை முன் வைத்து கோஷமிட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.