மாவட்ட செய்திகள்
திருப்பூர் கடத்தூர் மற்றும் கணியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்களின் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது.
திருப்பூர் மாவட்டம் கடத்தூர் மற்றும் கணியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்களின் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது மது அருந்திவிட்டு மது பாட்டில்கள் தண்ணீர் கேன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை விவசாய நிலங்களில் போட்டு சென்று வருகின்றனர்.
விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்லும் விவசாயிகளின் பாதங்களில் உடைந்து கிடக்கும் கண்ணாடி பாட்டில்களின் துண்டுகளால் காயங்கள் ஏற்படுகிறது மற்றும் மக்காத குப்பைகளாக பிளாஸ்டிக் பொருட்களால் கனிம வளங்கள் பாதிக்கப்படுகின்றன எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.