BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

4 மாநில தேர்தல் பாஜக வெற்றி கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி மனநல காப்பகத்தில் பாஜ நலத்திட்ட உதவி.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நாடு முழுதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.


கோவில்பட்டி தெற்கு ஒன்றிய பாஜ சார்பில் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது. முடுக்குமீண்டான்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்தில் பிஸ்கட், சோப், ஷாம்பு, கடலைமிட்டாய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.


மாவட்ட செயலாளர் சிபி மாரியப்பன், தெற்கு ஒன்றிய தலைவர் அம்மன் மாரிமுத்து, தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து, தெற்கு ஒன்றிய மேற்பார்வையாளர் ஜீவா கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் உமா செல்வி, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் சித்ரா, லாவண்யா, பிரபாகர், ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பக நிறுவனர் தேன்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )