BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை ஆளுங்கட்சியினர் தலையீட்டை கண்டித்தும், ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு பணிகளுக்கு செலவு செய்ததை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினர் தலையீட்டை கண்டித்தும், ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு பணிகளுக்கு செலவு செய்ததை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை செம்பனார்கோவில் குத்தாலம் கொள்ளிடம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றிலுள்ள ஊராட்சிகளில் ஆளும் கட்சி தலையீடு அதிகமாக உள்ளது. மேலும் ஆளும் கட்சி அல்லாத ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஆளும் தி மு க வினர் உள்ள ஊராட்சிகளுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஊராட்சி பணிகளுக்கு அல்லாமல் திமுக ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலையீட்டின் பேரில் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று முற்றுகை போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதைகளை காவல்துறையினர் தடுப்புக் கட்டைகளை வைத்து அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆளும் கட்சியின் தலையீட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )