மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே பிரசித்தி பெற்ற திருஈங்கோய்மலை கோயில் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருஈங்கோய்மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயத்தில் மூலவர் மரகதாசலேஸ்வரர் எனும் பெயர் கொண்ட ஈஸ்வரனை அகத்தியர் ஈ உருக்கொண்டு வழிபட்டதாக புராண சம்பவங்கள் கூறப்படுவதுண்டு.
பாடல்பெற்ற இத்தளத்தில் உள்ள மலைகோயிலில் பகுதியில் இன்று காட்டுத்தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ மலை முழுவதும் பரவியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு முசிறி தீயணைப்புத் துறையினர் வந்து பார்வையிட்டனர். மலைமேல் பரவி வரும் காட்டுத் தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைக்க முடியாது என்பதால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.
இருப்பினும் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
காட்டுத்தீ மலையடிவாரத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.