மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய
உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. இதில், திருப்பூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட,
உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய
வனச்சரகங்களில், அரிய வகை தாவரங்கள்,
விலங்குகள் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில்,
கடந்த சில மாதமாக மழைப்பொழிவு குறைந்து,
வனப்பகுதியில், வறட்சி துவங்கியுள்ளது. தமிழகம்
முழுவதும், பல்வேறு வனச்சரகங்களில், வனத்தீ
பரவி, சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,
உயிர்ச்சூழல் மண்டலமான திருப்பூர்
வனக்கோட்டத்துக்குட்பட்ட, வனச்சரகங்களில்,
தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள்
தீவிரப்படுத்தப்படாமல் உள்ளது. வனப்பகுதிகளில்
உரிய நிதி ஒதுக்கி, மலைவாழ் மக்களைக்கொண்டு
தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வந்தன.
தற்போது, இப்பணிகள் குறைந்த அளவே
நடந்துள்ளது. உடுமலை மூணாறு ரோட்டில்,
வாகனப்போக்குவரத்து, சுற்றுலா பயணிகளின்
வாகனங்கள் அதிக அளவு கடந்து வருகின்றன.
இருபுறங்களிலும் வேருடன் பிடுங்கப்பட்ட
சீமைக்கருவேல மரங்கள் காய்ந்து, அகற்றப்படாமல்
உள்ளன. இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள்,
வனப்பகுதியில் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் இறங்கி,
வனத்திற்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பை
ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, இப்பகுதியில்
வனத்துறையினர் கண்காணிப்பு, ரோந்துப்பணியை
தீவிரப்படுத்த வேண்டும். மேலும், வெளி மண்டல
பகுதியில், வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள்
மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு, வனத்தீ
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்து
ஏற்பட்டால், மேலும் பரவாமல் தடுப்பது. அணைப்பது
குறித்து பயிற்சிகள் மற்றும் தேவையான
உபகரணங்கள் வழங்க வேண்டும். வழக்கமாக.
கோடை காலம் துவங்கும் முன், வனத்தீ
கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அவர்கள் வாயிலாக, வனப்பகுதியை ஒட்டிய, கிராமங்களில், பல்வேறு விழிப்புணர்வு பணிகள்
மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனால், வனத்தீ ஏற்பட்டவுடன், உடனடியாக
வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கும்.
இதற்கென, வனத்துறை அலுவலர்கள்,
பணியாளர்களின் தொடர்பு எண்களை உள்ளடக்கிய,
துண்டு பிரசுரங்கள் அனைத்து
பகுதிகளிலும்,
வினியோகிக்கப்படும். தற்போது கோடைகாலம்
துவங்கி, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள
நிலையில், வனத்துறையினர் தீத்தடுப்பு பணிகளை
தீவிரப்படுத்த வேண்டும். என வன ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.