மாவட்ட செய்திகள்
உடுமலையில்மதுபானக் கடையை இடமாற்ற வேண்டும்:வியாபாரிகள் சங்கம் கோரிக்கை.
உடுமலை பசுபதி வீதியில் உள்ள அரசு மதுபானக் கடையை இடம் மாற்றக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உடுமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நகரமன்றத் தலைவர் மு.மத்தீனிடம் அளித்த மனு:
உடுமலை நகரில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த பசுபதி வீதியில் அர்பன் பேங்க் மற்றும் கூட்டுறவு வங்கி எதிரில் உள்ளது அரசு மதுபானக் கடை. அருகே பார் அமைந்துள்ளது. இக் கடைக்கு வரும் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு போதையில் அந்த வழியாக வரும் பெண்கள், பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு அசாதாரண நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த மது பானக் கடையை இடம் மாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்