மாவட்ட செய்திகள்
கடிச்சம்பாடி திருச்சிராப்பள்ளி கிராம நலச்சங்கம் கட்டிட திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் அருள்மிகு கண்டியங்குளத்து மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் கடிச்சம்பாடி திருச்சம்பள்ளி கிராம நலச்சங்கத்தின் அலுவலகக் கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், சங்கத்தின் கௌரவத் தலைவர் செல்லப்பா என்கிற டி.ஆர்.நாராயண ஐயர், செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் க.தி.விசுவநாதன் மற்றும் கடிச்சம்பாடி திருச்சம்பள்ளி கிராம நலச்சங்க அலுவலக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.