மாவட்ட செய்திகள்
பாப்பம்பாடியில் உள்ள சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப பயிற்சி துவக்க விழா நிகழ்ச்சி.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாப்பம்பாடியில் உள்ள சிகரம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில்
வெற்றிவேல் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் பள்ளி முதல்வர் செந்தில் தலைமையில் சிலம்ப பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக சிலம்பத்தின் அடிப்படை காலடி வரிசை பயிற்சி ,வெளிசுற்று ,உள்சுற்று பயிற்சி ,போர்க்கலை சண்டைமுறை பயிற்சி,தற்காப்பு மற்றும் தனித்திறமை போட்டி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை 12 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர் சிறுமிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு வெற்றிவேல் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசிரியர் சுரேஷ் 450 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தார்.
இதில் பள்ளி துணை முதல்வர் மனோகரன்,கிருஷ்ணமூர்த்தி, சேர்மன் வையாபுரி தாளாளர் முருகன்,மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.