மாவட்ட செய்திகள்
அனந்தமங்கலம் தசபுஜ திரிநேத்ர வீர ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேகப் பாலாலய பணிகள் துவக்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலத்தில் புகழ்பெற்ற தசபுஜ திரிநேத்ர வீர ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் ராஜகோபால சுவாமி ஆலயத்தில் பத்து கைகள் மூன்று கண்களுடன் ருத்ரனின் அம்சமாக போர்க்கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது என புராண வரலாறு கூறுகிறது.
ஒவ்வொரு அமாவாசையன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வார். ஆலயத்தில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு ராஜகோபுர பாலாலய திருப்பணி துவங்கியது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் முழங்க பால ஆலய திருப்பணி துவக்கி வைக்கப்பட்டது.
யாக பூஜைகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும், திமுக பிரமுகர்கள் எம்.ஆர்.ஜே.முத்துக்குமார், ஏ.கே.சந்துரு உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.