மாவட்ட செய்திகள்
12 முதல் 14 வயதுள்ள மாணவ – மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் தொடங்கி வைத்தார் அவினாசி ,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 2 – வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . எனவே , குழந்தைகளை கொரோ னாவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி போடப்பட்டு வரு கிறது . தற்போது 12 முதல் 14 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக படுகிறது . போடப் திருப்பூர் மாவட்டத்தில் 12-14 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் 73,100 பேர் உள்ளனர் .

இந்த தடுப்பூசியானது குழந்தைகள் படிக் கும் பள்ளிகளுக்கே சென்று செலுத்தப்பட உள்ளது . பள்ளி செல்லாத சிறார்களுக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது .

இப்பணிக்காக சுகாதாரத்துறையின் பள்ளி சிறார் நலவாழ்வு திட்ட மருத்துவக்குழு , நடமாடும் அவினாசி ஊராட்சி அலுவலகம் , இதர மருத்துவ குழுக்கள் , பள்ளி கல் வித்துறை , ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பணியாளர்கள் , பல்வேறு துறைகளைச்சார்ந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள் . இந்த முகாமிற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
