மாவட்ட செய்திகள்
தஞ்சையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது குவித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
தஞ்சை அருகே துலுக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் போலீஸார் இன்று துலுக்கம்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் துலுக்கம்பட்டியில் ஒரு போலி மதுபான ஆலை சட்டவிரோதமாக இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடோனுக்குள் போலீசார் நுழைந்தனர். அப்போது அங்கு இருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தஞ்சை பொட்டுவாசாவடியை சேர்ந்த மெல்வின் சகாயராஜ் என்பவர் கடந்த 4 மாதமாக போலி மதுபான ஆலை நடத்தி வந்ததும், இதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கொண்டு வந்து மதுபானங்கள் தயாரித்து அதனை போலி ஸ்டிக்கர்களை