மாவட்ட செய்திகள்
நாகை நாகூர் பாலக்காடு வடகுடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தனசேகரன் (29). மீது பல வழக்குகள்.
நாகை மாவட்டம் நாகூர் பாலக்காடு வடகுடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தனசேகரன் (29). இவர் மீது பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வழக்கில் இவர் கைதாகி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இதற்கிடையில் வழிப்பறி திருட்டு சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த தனசேகரனை அழைத்து வர நாகப்பட்டினத்தில் இருந்து ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் மற்றும் காவல்துறை வாகனத்தில் கோபிச்செட்டிப்பாளையம் சென்றனர். பின்னர் நேற்றிரவு அங்கிருந்து தனசேகரனை அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பகுதியில் போலீசார் தங்கள் வாகனத்தை நிறுத்திய போது போலீசாரின் பிடியிலிருந்து கை விலங்கோடு தனசேகரன் தப்பியோடி விட்டான்.
தொடர்ந்து இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் தப்பியோடிய தனசேகரனை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.