மாவட்ட செய்திகள்
பொம்மிடி அருகே பணியின் போது உயிரிழந்த தலைமை காவலருக்கு 21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்.
பொம்மிடி அருகே பணியின் போது உயிரிழந்த தலைமை காவலருக்கு 21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில் பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் வயது 45 இவர் தமிழ்நாடு காவல்துறையில் 22 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்னால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
பணியின்போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சொந்த ஊரான பில்பருத்தி கிராம மயானத்தில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் தங்கராசு தலைமையில் காவலர் குழு இறந்த சரவணன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த காவலர் சரவணனுக்கு மனைவி செல்வி மகன் சுஜித் மகள் வேதா ஆகியோர் உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.