மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி க்ஷத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் 17 பேர் தொடர்ந்து ஒரு மணிநேரம் கண்களை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றி உலக சாதனை.
இராமநாதபுரம் மாவட்டம்
கமுதி க்ஷத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவ,மாணவிகள் 17 பேர்
தூத்துக்குடி மாவட்டம், வேலாயுதபுரத்தில்,நேரு யுவகேந்திரா மற்றும் தேவராஜ்
வஸ்தாவி சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய
சிலம்பாட்டத்தில்,தொடர்ந்து ஒரு மணிநேரம் கண்களை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்ததுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு அதற்கான சான்றிதழ்களும்,பதக்கங்களும் வழங்கப்பட்டன.வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை கடித்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் வெங்கடேஷ்பாபு,
செயலாளர் முத்துவிஜயன்,
பொருளாளர் முத்துமுருகன் மற்றும் உறுப்பினர்கள் ராஜகுமாரவேல்,காந்திராஜன்,
பள்ளியின் முதல்வர் ஸ்ரீதேவி,
உடற்கல்வி ஆசிரியர் லெட்சுமணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.