மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் பணியை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது வருகிற 18 19ஆம் தேதி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணியை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது இதை அடுத்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி என முப்போக சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறுவை அறுவடை பணி முடிந்து தற்போது விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றும் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி மந்தமாக நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர் தஞ்சை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த குவித்து வைத்துள்ள நெல்மணிகள் என சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.

நாளொன்றுக்கு 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உத்தரவிட்டும் வெறும் 500 மூட்டைகள் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் இதனால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது என கூறும் விவசாயிகள் வருகிற 18 மற்றும் 19ம் தேதி டெல்டா மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விடும் என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்த பிறகும் 8 நாட்கள் 10 நாட்களாக காத்துக் கிடப்பதோடு தினமும் தார்பாய்களை விலக்கி நெல்மணிகளை உலர்த்தி வருவதால் கூடுதல் செலவு ஆவதால் வண்ணாரப்பேட்டையில் உடனடியாக கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் ஒன்றை திறந்து அனைத்து நெல் மூட்டைகளையும் மழைக்கு முன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
