BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா.

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா: 3006 லிட்டர் பால் அபிஷேகம்.

பொற்றையடி சீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் பத்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சாய்பாபாவுக்கு 3006 லிட்டர் பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு கோபுர கலச அபிஷேகமும், காலை 8 மணிக்கு சங்கல்ப யாகமும், தொடர்ந்து அன்னதானமும், காலை 9 மணிக்கு பக்தர்கள் வழங்கிய 3006 லிட்டர் பால் சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது சென்னை வீரமணி ராஜு |அபிஷேக் ராஜு ஆகியோரின் பாபாவின் பஜனைப் பாடல்கள் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சாய்பாபாவுக்கு பன்னீர், இளநீர், சந்தணம், களபம், திருநீறு உட்பட ஒன்பது விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பிரபல சினிமா பின்னணி பாடகி மால்குடி சுபாவின் சாய்பாபா பக்தி கானங்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு அன்னதானமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஆரத்தியும் நடைபெறுகிறது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திரளான பாபாபக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொற்றையடி சாய்பாபா ஆனந்த ஆலய மேலாளர் கதிர்வேல் , சீரடி சாய் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சாய் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )