BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியா குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்.

ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

கன்னியா குமரி மாவட்டத்தில் புதிய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் புதிய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பது குறித்து , தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரப்பர் வாரிய நிர்வாக இயக்குநர் கே.என்.ராகவனிடம் காணொளி காட்சி வாயிலாக கலந்தாலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் பெருமளவில் நடைபெற்று வரும் நிலையில் , ரப்பருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது . பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம் வகையில் புதிய ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருந்தது . தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் , ரப்பர் ஆராய்ச்சி நிலையத்திற்கென வேளிமலை வருவாய் கிராமத்தில் சுமார் 460 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு . அதனை இந்திய ரப்பர் வாரியத்திற்கு ஒப்படைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது . இதில் , நிலம் ஒப்பந்த அடிப்படையில் ரப்பர் வாரியத்திற்கு வழங்குவது குறித்தும் , அதற்கான நிபந்தனைகள் குறித்தும் ஒன்றிய வர்த்தக துறை செயலாளருக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக கடிதம் எழுதி இறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது .

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )