BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுத் தொழில்சார் பயிலரங்கத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு.

தஞ்சையில் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுத் தொழில்சார் பயிலரங்கத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது.

தஞ்சாவூர் மகர்நோம்புச் சாவடி அருகிலுள்ள பிளேக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகள் மேல் படிப்பான (உயர்கல்வி) தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தொழில்சார் கருத்துரை பயிலரங்கம் கடந்த 12- ந் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பயிலரங்கத்தில் கூறிய கருத்துக்களை உள்வாங்கி அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 3 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று பிளேக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்க தலைவரும், வழக்கறிஞருமான விவியன் அசோக் தலைமை வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வர்ஜல் ஆண்ட்ரோஸ் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ஸ்ரீராம், ரோட்டரி பொறுப்பாளர் சந்தனசாமி, பள்ளி உடற்கல்வி இயக்குனர் பால் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக முதல் பரிசு பெற்ற மாணவி ரூபா ஸ்ரீ, இரண்டாம் பரிசு பெற்ற மாணவி தேவிகா, மூன்றாம் பரிசு பெற்ற மாணவர் விஸ்வா ஆகியோர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )