BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை, பிப்.13- நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர உள்ள தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலரின் மகளுக்கு மத்திய மண்டல டிஜிபி பாலகிருஷ்ணன் புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவரது மகள் சவுந்தர்யா.

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் சவுந்தர்யா தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க உள்ளார்.

தஞ்சைக்கு ஆய்வு பணிக்காக வந்த மத்திய மண்டல டிஜிபி பாலகிருஷ்ணன் இது குறித்து அறிந்து மாணவி சவுந்தர்யாவை வரவழைத்து புத்தகங்கள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

மேலும் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா ஆகியோரும் மாணவி சவுந்தர்யாவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )