மாவட்ட செய்திகள்
தெருவோர கடைகளை முறைப்படுத்த திட்டம்.

உடுமலையில், பிரதான ரோடுகளை ஆக்கிரமித்துள்ள, தெருவோர கடைகளை முறைப்படுத்த நகராட்சி திட்டமிட்டுள்ளது.உடுமலை நகரின் பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட ரோடுகளை ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
தெருவோர வியாபார கடைகளை முறைப்படுத்தும் வகையில், நகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் மத்தீன், கமிஷனர் சத்யநாதன், நகர் நல அலுவலர் சரவணன், உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் நடைபாதை வியாபாரிகள் பங்கேற்றனர்.இதில், நகராட்சி சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, பாதிப்பு இல்லாத பகுதிகளில், 7 அடிக்கு, 6 அடி என்ற அளவில், ஒருவருக்கு ஒரு பகுதி ஒதுக்கீடு செய்வது.
கடைகள் வெளியே வராமல் தடுக்க, கம்பி வேலி அமைத்தல், வெங்கடகிருஷ்ணா ரோட்டில், முழுமையாக கடைகளை அப்புறப்படுத்துதல், குப்பையை தரம் பிரித்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்.உணவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
