மாவட்ட செய்திகள்
காரைக்கால் மாவட்டம் அடுத்த திருபட்டினம் நடன காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் கண்டு களிப்பு.
காரைக்கால் மாவட்டம் அடுத்த திருபட்டினம் நடன காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் கண்டு களிப்பு.
காரைக்கால் அடுத்த திருபட்டினத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடைபெற்ற நடன போட்டியில் காலை தூக்கி ஆடிய சிவபெருமான் வெற்றிபெற்றதாக திருவிளையாடல் புராணம் கூறுகின்றது. அவ்வாறு தோல்வியுற்ற பார்வதி தேவியார், கடும் கோபத்துடன் தில்லை நடராஜனை நோக்கி அமர்ந்த இடம் தான் திருபட்டினம் நடன காளியம்மன் கோயில் என அக்கோயிலின் தலவரலாறு கூறுகின்றது.
காரைக்கால் மாவட்டம் திருபட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு நடன காளியம்மன் கோயிலை நாடார் உறவின் முறையினர் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலின் வருடாந்திர திருவிழாவான பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு 15. 3 .2022 அன்று விக்னேஸ்வர பூஜையுடன் நடன காளியம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.16ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் 17-ஆம் தேதி அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இரவு நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து வீதியுலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வள்ளி , தேவசேனா சுப்பிரமணியர் மற்றும் நடன காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
விசேஷ வானவேடிக்கை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 27ம் தேதி பொங்கல் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று, விடையாற்றி நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திருபட்டினம், பட்டினச்சேரி, வாஞ்சூர், போலகம், நிரவி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.