மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை -பள்ளப்பட்டி 12ஆவது வார்டு உறுப்பினர் க.ரவிச் சந்திரனுக்கு (டாக்டர்) மதிப்புமிகு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
மார்ச்21 கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் புளூஸ்டார் ஹோட்டலில் 70க்கும் மேற்பட்ட சமூக சேவர்களுக்கு ஐகேசெவன் ஈவன்ட்மேனேஜ் மென்ட் சார்பாக எக்ஸ்ப்பர்ட் அன்ட் எக்சலென்ஸ் 2022 க்கான விருது வழங்கும் விழா மற்றும் ஐகேஏசிசிஎஸ் எஃப் அமைப்பு துவக்க விழா நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 12ஆவது வார்டு உறுப்பினர் க.ரவிச்சந்திரன் அவர்களுக்கு மதிப்பு மிகு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கப்பட்டது.இதுஇவருக்கு மூன்றாவது விருதாகும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறந்த மக்கள் சேவகர் விருதும்,சென்ற ஜனவரி மாதம் (01-01-2022 ) மதுரை காவல்பார்வை சார்பில் சிறந்த மக்கள் சேவகர் விருது கிடைக்கப்பெற்றார்.பின்னர் இதேவருடம் (20-03-2022) டாக்டர் பட்டம் பெற்று அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் கடந்த முப்பது ஆண்டுகள் மக்கள் பணியில் சேவையாற்றி தொடர்ந்து ஐந்து முறை ( 25) ஆண்டுகள் 12ஆவது வார்டு கவுன்சிலராக பொறுப்பேற்று மக்கள் சேவையாற்றிய தற்காக எனக்கு இந்த விருதுகள் வழங்கபட்டதை நான் பெருமையாக நினைக்கிறேன் காரணம் இது மக்களுக்கு கிடைத்த விருது இன்னும் சிறந்து மக்கள் சேவையாற்ற எனக்கு ஒரு உந்துதலாக இருக்கும் எனக்கூறி தமக்கு வாய்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.