BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கைவினைத் தொழில் நுணுக்கங்களைக் கற்ற கல்லூரி மாணவிகள்!

கைவினைத் தொழில் நுணுக்கங்களைக் கற்ற கல்லூரி மாணவிகள்!

கிள்ளிகுளம் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராமத்தில் உள்ள கைவினைப் பொருட்கள் தயாரிப்புக் கூடத்தை பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கீழ மணக்குடி பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சுயதொழிலாக தனது தென்னந்தோப்பில் இருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களைச் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவர் தச்சுவேலை செய்துவந்தார். ஆனால் கைவினைப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலின் மேல் அளவுகடந்த ஆர்வம் கொண்டு இத்தொழிலை மேற்கொண்டுள்ளார்.

இத்தொழிற்சாலையினை இவர் ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இவரிடம் 10 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கைவினைப் பொருட்கள் தொழிற்கூடத்தை வெற்றிகரமாக எப்படி இயக்குவது, அதில் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் இவரிடம் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றனர்.

மாணவிகளுக்குக் கைவினைக்கலை வல்லுநர் முத்து பயிற்சி அளிக்கையில், “தென்னை மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குருவிக் கூடுகள், குப்பிகள், அலங்காரப் பொருட்கள், சமையலுக்குத் தேவையான பொருட்கள் போன்றவை செய்து விற்பனை செய்யப்படுகிறது. குருவிகள் பயனடையுமாறு குருவிக் கூடு செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்” என்றார். இங்கு செய்யப்படும் இக்கைவினைப் பொருட்கள் கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள், வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவது பற்றியும், இதற்கான தேவைகள் குறித்தும் விவரித்தார்.

இத்தொழிற்சாலையைக் காண்பதற்காக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகளான ஜெயஸ்ரீ, நிறைமதி, நிவேதிதா, நிவேதா, ப்ரிநிலா, ரோஷினி, யுவரஞ்சனி ஆகியோர் வந்திருந்தனர். தென்னை உள்ளிட்ட மரச்சாகுபடி செய்யும் விவசாயிகளும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பின் மூலம் எப்படி உபரி வருவாய் ஈட்டலாம் என்பது குறித்து கற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )