BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன் 15 வது வார்டு பகுதியில் வாக்கு சேகரிப்பு!!!

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டில் போட்டியிடுகின்ற திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.கல்யாணி அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்றுமாலை கீழவாசல் காவல் நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி .மகேந்திரன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தெருக்களில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற வாக்காளர்களின் கோரிக்கை நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், மாநகர செயலாளர் ஆர். பி. முத்துக்குமரன், திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் மாநகர துணை செயலாளர் பி.மோகன், மாவட்ட பிரதிநிதி பி.கண்ணன், முருகானந்தம், அகரம் மணிகண்டன், முத்து மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் வெ.சேவையா, தி. கோவிந்தராஜன், ஆர் .செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக சென்று வீடு வீடாக ஓட்டு சேகரித்தனர். மக்கள் எழுச்சியுடன் வரவேற்று வாக்களிக்க உறுதி அளித்தனர் . துரை. மதிவாணன்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )